சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில்’.. ஐ.டி ஊழியர்களை வைத்து செய்த.. “பயங்கரம் பெண்களை அதற்க்கு மட்டும் யூஸ்”… சென்னையில் நடந்த சதுரங்க வேட்டை ..? - cinefeeds
Connect with us

Uncategorized

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில்’.. ஐ.டி ஊழியர்களை வைத்து செய்த.. “பயங்கரம் பெண்களை அதற்க்கு மட்டும் யூஸ்”… சென்னையில் நடந்த சதுரங்க வேட்டை ..?

Published

on

சென்னையில் ஐ.டி.நிறுவனங்களில் வேலையிழந்த இளைஞர்களைக் குறிவைத்து, உங்களுக்கு வேலை வாங்கி தருவதாக போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கான பணம் சுருட்டிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

அந்த கால் சென்டரில் வேலை செய்யும் இளைனர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களைச் சேகரித்து அவர்களுக்கு போனில் பேசி. குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி. பொது மக்களை ஏமாற்றி மயக்குவார்கள். பின்பு அவர்களின் ஆதார் எண், ATM ரகசிய குறியீட்டு எண், வங்கிக் கணக்கு விவரம், pan card விவரம் போன்றவற்றைச் சேகரித்து, பின்பு வங்கிக் கடன் தொகைக்கு ஏற்ப முன் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறுவார்கள்.

இதையடுத்து தங்களது வங்கிக் கணக்கிற்கு வரும் பணத்தை சுருட்டும் அந்த கும்பல், பணம் போடும் நபர்களின் OTP நம்பரை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி அக்கவுண்டில் இருக்கும் மொத்த பணத்தையும் Online மூலம் எடுத்து சுருட்டி விடுவார்கள். அதேபோன்று வங்கியிலிருந்து அதிகாரி பேசுவது போலப் பேசி, உங்கள் ATM.கார்டை புதுப்பித்துத் தருவதாகச் கூறி, ATM.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கியும் இன்னொரு வகையான நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Advertisement

 

இந்த மோசடி கும்பலிடம் சாதாரண பொதுமக்கள் மட்டுமல்லாது உயரதிகாரிகள், மற்றும் நீதிபதிகள் கூட எமர்ந்துள்ளனர். இதுவரை இந்த கும்பலிடம் தமிழகம் முழுவதும் சுமார் 1000 பேர் வரை ஏமாந்து, கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதில் 400 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். மோசடி கும்பல் நடத்திய போலி கால் சென்டரில் மட்டும் 70 பேர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளனர்.

Advertisement

 

அந்த போலி கால் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தங்காது காம வலையில் விழவைத்து. தங்களின் ஆசையை தீர்த்து கொண்டுள்ளனர். இந்த வழக்கில் சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன், பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன், ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்களில் செல்வகுமார்தான் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவர்.

Advertisement

 

மேலும் விசாரணையில் பென்ஸ் சரவணன் தனது கிளப் நஷ்டத்தில் இயங்கியதால், கிளப் நடத்துவதற்கு மற்றும் கட்டிடத்துக்கு கூட வாடகை கொடுக்க முடியாமல், திணறி வந்தார். அதனால் இந்த மோடி கும்பலுக்குத் தனது அலுவலகத்தை ரூ.5 லட்சம் வாடகைக்கு விட்டு, மோசடி பணத்திலிருந்து ஒரு ஷேர் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசடி கும்பல் உரிமையாளர்கள் பென்ஸ், ஜாக்குவார், BMW போன்ற சொகுசு கார்களில் வலம் வந்துள்ளார்கள். ஊழியர்களையும் ,பொதுமக்களையும் ஏமாற்றி வந்துள்ளனர்.

Advertisement

 

புகார் அடிப்படியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் செயல்பட்ட போலி கால்சென்டர் ஒன்றிலும் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in