“ஐயோ கடவுளே என் புள்ள” தந்தையின் கண்முன்னே பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி.. கதறியழுத தந்தை… திருவண்ணாமலையில்அதிர்ச்சி ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ கடவுளே என் புள்ள” தந்தையின் கண்முன்னே பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி.. கதறியழுத தந்தை… திருவண்ணாமலையில்அதிர்ச்சி ..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நெஞ்சை பதறவைக்கும் சோகமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கல்லூரி மாணவியான துர்கா தேவி, தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் வாகனம் மீது பலமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில், தந்தையின் கண்முன்னேயே மாணவி துர்கா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in