TRENDING
‘குடி குடியை கெடுக்கும் ,மது அருந்தி விட்டு’…. தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்…?

குடி குடியை கெடுக்கும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒரு கோர சம்பவம் அரங்கேரி இருக்கிறது கன்னடாவில் .கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை ஏற்படுத்திய விபத்தில், அவரது 17 வயது மகள் பரிதாபமாக பலியானார்.கால்கரியைச் சேர்ந்த Michael Shaun Bomford (54) தனது மகளையும் அவரது தோழியையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தனது வாகனத்தில் ஏற்றியுள்ளார்.அந்த இளம்பெண்கள் இருவரும், ringette என்னும் ஒரு விளையாட்டின் பயிற்சியாளர்களாக சேருவதற்கு விண்ணப்பிப்பதற்காக, தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்காக தங்கள் தந்தையுடன் பொலிஸ் நிலையம் ஒன்றிற்கு புறப்பட்டுள்ளார்கள்.
ஆனால் போகும் வழியில் திடீரென பாதை மாறிய வாகனம், பல்டி அடித்ததோடு, அந்தரத்தில் பறந்ததை சக வாகன ஓட்டிகள் பார்த்திருக்கிறார்கள்.வாகனத்திலிருந்த Michael, அவரது மகள் Meghan (17), மற்றும் அவரது தோழி, Kelsey Nelson (16) ஆகிய மூவரும் வாகனத்திலிருந்து தூக்கி வீப்பட்டுள்ளார்கள். விபத்தில் Meghan உயிரிழக்க, Kelseyக்கு மூளையில் காயம்பட்டு, நடந்ததையே மறந்துவிட்டார்.
தற்போது கொம்பு ஊன்றி நடக்கும் Michael, விபத்து நடந்தபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் விபத்தை கண்ணால் பார்த்தவர்கள், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் அவர் 112 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓட்டுவதை கவனித்துள்ளனர்.
விபத்தைக் கண்டவர்கள் நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்த நிலையில், Michael மீது, மரணத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் மோசமாக வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.விசாரணை ஒரு வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.