நிலவில் மாயமான விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர்.! புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நாசா.. தமிழன் பெருமை ஒலித்தது … - cinefeeds
Connect with us

TRENDING

நிலவில் மாயமான விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழர்.! புகைப்படத்துடன் ஆதாரத்தை வெளியிட்ட நாசா.. தமிழன் பெருமை ஒலித்தது …

Published

on

சில ஆண்வர்க்கத்தால் நம் நாட்டிற்கு இழுக்கு ஏற்பட்டாலும் இப்படி சில ஆண்தெய்வங்களால் நம் நாடு பெருமையடைகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரை சென்னையை சேர்ந்த பொறியாளர் உதவியுடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கண்டறிந்து புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவில் தரையிறக்கும் பணி செப்டம்பர் மாதம் 7 ம் திகதி நடந்தது.

அப்போது தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில், பூமியுடனான கட்டுப்பாட்டை விக்ரம் லேண்டர் இழந்தது. தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது, ஆர்பிட்டார் மூலம் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கபட்டது எனினும் புகைப்படம் ஏதும் வெளியாகவில்லை.  லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் மற்றும் பாகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது.மேலும், லேண்டர் விழுந்த இடத்தையும், பாகங்களையும் புகைப்படங்களுடன் வெயிட்டது அமெரிக்காவின் நாசா.

Advertisement

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆர்.ஓ.சி) குழு, தளத்தில் செப்டம்பர் 17ம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படதை்தைத செப்டம்பர் 26 அன்று முதல் மொசைக்கை புகைப்படத்தை வெளியிட்டது. பலர் விக்ரமின் அறிகுறிகளைத் தேட மொசைக் படத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர். சென்னையச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் விக்ரம் லேண்டனரின் பாகங்களை அடையாளம் கண்டு எல்.ஆர்.ஓ திட்டத்தை தொடர்பு கொண்டார்.இந்த உதவிக்குறிப்பைப் பெற்ற பிறகு, எல்.ஆர்.ஓ.சி குழு படங்களுக்கு முன்னும் பின்னும் ஒப்பிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியது.

முதல் படங்கள் எடுக்கப்பட்டபோது, ​​விழுந்த இடம் மோசமாக வெளிச்சம் பெற்றது, இதனால் எளிதில் அடையாளம் காண முடியவில்லை. அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய திகதிளில் இரண்டு படங்கள் எடுக்கப்பட்டன. எல்.ஆர்.ஓ.சி குழு இந்த புதிய படத்தை சுற்றியுள்ள பகுதியை ஆராய்ந்து விழுந்த தளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாகங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தது என நாசா தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in