“இனி ஏமாற மாட்டோம்..! தரமில்லாத வேலை… தாங்காத ஆத்திரம்..! அதிகாரிகளுக்குக் காத்திருக்காமல்… பாலத்தை இடித்துத் தள்ளிய கிராம மக்கள்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி ஏமாற மாட்டோம்..! தரமில்லாத வேலை… தாங்காத ஆத்திரம்..! அதிகாரிகளுக்குக் காத்திருக்காமல்… பாலத்தை இடித்துத் தள்ளிய கிராம மக்கள்..!!”

Published

on

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பின்னத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்கொட்டாய் பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள், மிகவும் மோசமான முறையில் தரம் குறைவாக நடைபெற்று வருவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலம் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் கலவை மற்றும் பிற கட்டுமானப் பொருட்கள் மிகக் குறைந்த தரத்தில் இருந்ததை நேரில் கண்ட பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், அதிகாரிகளுக்காகக் காத்திருக்காமல் தாங்களாகவே முன்வந்து அந்தப் பாலத்தின் கட்டுமானப் பகுதிகளை இடித்துத் தள்ளினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தரமற்ற முறையில் பாலத்தை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமான புதிய மேம்பாலத்தை அரசு முறையாகக் கட்டித் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in