LATEST NEWS
பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு…. வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளை…. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர் கே வின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழில் எல்லாம் அவன் செயல் மற்றும் அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதா கிருஷ்ணா என்கின்ற ஆர் கே. 63 வயதாகும் இவருக்கு ராஜி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஆர் கே மனைவி ராஜி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் வீட்டின் பின்பக்கமாக வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவரை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர். அதன் பிறகு வீட்டின் பீரோவில் இருந்த 250 சவர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு இரண்டு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
