LATEST NEWS
என்ன தயவு செஞ்சு வெளிய அனுப்புங்க….! இல்லன்னா நான் உண்ணாவிரதம் இருப்பேன்….. எச்சரித்த ஜி பி முத்து….!!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வெற்றிகரமாக முதல் வாரத்தை முடித்து 2-வது வாரம் முடிவடைய உள்ளது. இந்த சீசனில் மக்களுக்கு மிகவும் பிடித்த நபராக ஜிபி முத்து தான் இருக்கின்றார். இவர் தற்போது பிக் பாஸில் நம்பர் ஒன் போட்டியாளர் என்ற ரேங்கிங் பெற்றுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு ஜிபி முத்துவின் அப்பாவித்தனமான பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.
டிவிட்டரில் அவருக்கு தான் அதிக ஆதரவு இருந்து வருகின்றது. இந்நிலையில் ஜிபி முத்து நேற்றிலிருந்து தன்னை வெளியில் விடும்படி கேட்டு வருகிறார். ஆனால் பிக் பாஸ் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். என்னை வெளியில் அனுப்புங்க. எனக்கு மூச்சு முட்டுது, இனிமேல் இங்கு இருக்க முடியாது என்னை வெளியில் அனுப்பவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன். என் தம்பியை வர சொல்லுங்க நான் பேசணும் என்று ஜிபி முத்து எச்சரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.