தற்போது மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமனின் மகன் தான் இவர். காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தை விட தமிழில் முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்கள் வரை இவருக்கு மிகப்பெரிய பிரேக் எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் என்கிற அந்தாலஜி படம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்தது என தற்போது இவரது திரையுலக பயணத்தில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் காதலர் தினத்தில் காளிதாஸ் தான் சிங்கிள் இல்லை என அறிவித்துள்ளார். தன்னுடைய காதலி தாரிணி கலிங்கராயருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kalidas Jayaram இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kalidas_jayaram)

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tarini Kalingarayar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tarini.kalingarayar)