GALLERY
வருங்கால மருமகனுடன் NEW YEAR கொண்டாட்டம்…. கமல்ஹாசன், மணிரத்தினம் இணைந்து எடுத்த Viral photos…!!

உலகம் முழுவதும் 2024-ம் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. இதனால் பொதுமக்கள் கேக்குகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர்.

#image_title
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title
அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும் கமலஹாசனுடன் இயக்குனர் மணிரத்தினம், நடிகை சுஹாசினி ஆகியோரும் உள்ளனர்.

#image_title
மேலும் பிரபல நடிகையான லிஸ்சி லட்சுமியும் கமல்ஹாசன் உடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

#image_title
நடிகை லட்சுமியை கமல்ஹாசன் தான் விக்ரம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார்.

#image_title
ஆரம்ப காலகட்டத்தில் லட்சுமி அதிகமான மலையாள படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்துகிறார்.

#image_title
கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். அந்தப் படத்திற்கு தக் லைப் என பெயரிடப்பட்டுள்ளது.

#image_title
சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும், மணிரத்தினமும் இணைவது குறிப்பிடத்தக்கதாகும்.

#image_title
தக் லைப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

#image_title
அந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டார் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

#image_title