LATEST NEWS
ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜை லம்போகினி காரில் செம மாஸாக வந்த லெஜெண்ட் சரவணன் வைரல் புகைப்படங்கள்

பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணா ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி தினத்தை கொண்டாடி இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதில் வெளியாகிய வைரலாகி வருகின்றது சரவணா ஸ்டோர் என்ற மிகப்பெரிய துணிக்கடையை நடத்தி வருபவர் அருள் சரவணன் இவர் சென்னையில் தி லெஜெண்ட் சரவணா என்ற பெயரில் பல பிராஞ்சுகளை நடத்தி வருகிறார் தனது கடையை விளம்பரம் படுத்துவதற்காக முதன்முதலாக நடிக்க தொடங்கினார்.
அப்போது ஹன்சிகா தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்தார் அதன் பிறகு அவருக்கு நடிப்பு மீதான ஆர்வம் அதிகரிக்க தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை இரட்டை இயக்குனர்களான செடி ஜெசி இயக்கியிருந்தார்கள் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது இப்படத்தில் விவேக் பிரபு நாசர் உள்ளிட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள் ஆனால் படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை அதுமட்டுமில்லாமல் லெஜெண்ட் சரவணன் அவர்களை கடுமையாக ட்ரோல் செய்தனர்
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத அருள் சரவணன் யார் என்ன வேணாலும் செய்யட்டும் தனக்கு பிடித்ததை தான் செய்வேன் என்று கூறி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் இந்நிலையில் நேற்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆட்டோ தொழிலாளர்களுடன் கொண்டாடி இருக்கிறார் அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இப்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று ஒரு பக்கம் பாராட்டினாலும் மற்றொரு பக்கம் ரோல் செய்து வருகிறார்கள்
View this post on Instagram