LATEST NEWS
மனைவி இறந்து ஆறே மாதத்தில் மறுமணம்… இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய மதுரை முத்து.. வெளியான புகைப்படம்..!!

தமிழகத்தில் மதுரை முத்து என்ற பெயரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய நகைச்சுவையால் பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார். பல வருடங்களாக நகைச்சுவை செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் லோகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி அவரின் மனைவி உயிரிழந்தார். மதுரை பிள்ளையார்பட்டி செல்வதற்காக டிரைவர் கண்ணனுடன் அவர் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் லோகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மனைவி இழந்த சில மாதத்திற்குள்ளேயே தன்னுடைய மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார். மனைவி இழந்து ஆறு மாதத்திலேயே மதுரை முத்து மறுமணம் செய்து கொண்டதால் பலரும் அவரை விமர்சித்தனர். இருந்தாலும் தனக்கு வயதான பெற்றோர் மற்றும் இரண்டு மகள்கள் இருப்பதால் அவர்களுக்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன் என்று மதுரை முத்து விளக்கமளித்தார்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்ததாகவும் அவரின் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டதால் மிகுந்த மனவேதனையில் இருந்து அவரை தனது குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும் மதுரை முத்து தெரிவித்தார். இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை மதுரை முத்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க