CINEMA
நாகசைதன்யா-சோபிதா திருமணம் அங்கேயா…? வேண்டாம் என எச்சரிக்கும் ரசிகர்கள்…!!

நடிகை சமந்தாவும், நாத சைதன்யாவும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடித்த மூலம் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகை சோபிதாவை நாகசைதன்யா காதலிக்க இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள். ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் திருமண தேதியை குறித்து விட்டார்களாம். 2025 ஆம் வருடம் மார்ச் மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்த ஆண்டின் இறுதியிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. ராஜஸ்தானில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்படுகிறதாம். இதனால் ரசிகர்களோ, வேண்டாம் நாக சதன்யா அது உங்களுக்கு ராசியில்லை என எச்சரித்துக் கொண்டிருக்கிறார்களாம். மேலும் திருமண தேதி இதுதான் என்று நாகார்ஜுனா அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.