LATEST NEWS
ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..! சூப்பர் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சச்சின், சூர்யா, ராம் சரண்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ..!!

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) என அழைக்கப்படும் டி 10 தொடர் போட்டிகள் நேற்று மும்பையில் தொடங்கியது. இதில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஸ்ரீநகர் என ஆறு அணிகள் விளையாட உள்ளது.

#image_title
வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறும் தொடரில் மொத்தம் 18 போட்டிகள் போட்டிகள் நடத்தப்படும். ஐ.எஸ்.பி.எல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்குவார்கள்.
அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூர் அணியை ஹிருத்திக் ரோஷனும் வாங்கியுள்ளனர். இதனை அடுத்து ஸ்ரீநகர் அணியை அக்ஷய்குமாரும் ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம் சரணும் வாங்கினர் . முதல் போட்டியில் அமிதாப்பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதியது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் நடிகர்கள் ராம்சரண், சூர்யா, அக்ஷய்குமார், சச்சின் ஆகியோர் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
• Here’s The Video!! 🥵🔥#Kanguva | #ChennaiSingams | pic.twitter.com/8pRWGDYLsl
— Mσσʂα | Sϝƈ 🇳🇱 (@Moosa_Offl) March 6, 2024