2 ரூபா பலூனுக்காக இப்படியா..? அங்கிள் என்னை விடுங்க தெரியாம உடைச்சிட்டேன்… அறைக்குள் பூட்டி வைத்துச் சிறுமிக்குக் கொடூரத் தண்டனை கொடுத்த கடைக்காரர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2 ரூபா பலூனுக்காக இப்படியா..? அங்கிள் என்னை விடுங்க தெரியாம உடைச்சிட்டேன்… அறைக்குள் பூட்டி வைத்துச் சிறுமிக்குக் கொடூரத் தண்டனை கொடுத்த கடைக்காரர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் மிகச் சிறிய விஷயத்துக்காகச் சிறுமி ஒருவர் கொடூரமாகப் பூட்டி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடைக்காரர் ஒருவரின் கடை வாசலில் கட்டப்பட்டிருந்த பலூன்களில் ஒன்றை, அவ்வழியாகச் சென்ற சிறுமி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரூ.2 மதிப்புள்ள அந்த பலூன் வெடித்துள்ளது.

https://twitter.com/MandeepRajBhar9/status/2080581148493889664/video/2

Advertisement

இதனால் கடும்கோபமடைந்த ராஜு குப்தா என்ற கடைக்காரர், அந்தச் சிறுமியை ஒரு அறைக்குள் பல மணி நேரம் பூட்டி வைத்துத் தண்டனை கொடுத்துள்ளார். விஷயம் அறிந்த சிறுமியின் தாய் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜு குப்தாவிடமிருந்து தனது மகளை மீட்டுள்ளார். ரூ.2 பலூனுக்காக அந்தச் சிறுமிக்கு அளிக்கப்பட்ட இந்தத் தண்டனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் மனிதநேயமற்ற முறையில் மதச்சார்பு வெறுப்புணர்வுகள் ஊடுருவி, சாமானிய மனிதர்களின் மனசாட்சியை உலுக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்துச் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in