TRENDING
“துபாயில் நடந்த துன்புறுத்தல்”… ‘அழுது , புரண்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில்’…. நடந்த பரப்பரப்பு…?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரண்மனை சிறுவயலை பகுதியை சேர்ந்த தம்பதிகள் சுரேஷ் மற்றும் சவிதா கொத்தனார் வேலை செய்துவரும் சுரேஷ் உள்ளூரில் சரியாக வேலைக்கிடைக்கத்தால் குடும்பம் மிகவும் கஷ்ட்டப்பட்டு வந்தது. இந்தநிலையில் வெளிநாடுகளில் கொத்தனாருக்கு அதிகப்படியான சம்பளம் என்ற நிலையில் சுரேஷ் துபாய்க்கு சென்றுள்ளார் .
துபாயில் கொத்தனார் வேலைக்கொடுக்காமல் பல்வேறு வேலைகளை கொடுத்து சுரேஷை துன்புறுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த கம்பெனியை விட்டு வெளியேறிய சுரேஷ் வீட்டிற்கும் வரமுடியாமல் வேறு எங்கும் வேலை செய்யமுடியாமல் துபாயின் சாலை ஓரத்தில் பரிதவித்து கொண்டுஇருக்கும் வேளையில் தன் மனைவிக்கு வீடியோ மூலம் நடந்ததை தெரியப்படுத்தினார்.
இதனை பார்த்த மனைவி சவிதா மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அழுது புரண்டு தன் கணவரை மீட்டு தருமாறு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்