LATEST NEWS
நடிகர் சூரியின் விடுதலை பட சூட்டிங்கில் திடீர் விபத்து…. முக்கிய பிரபலம் மரணம்…. திரையுலகினர் அதிர்ச்சி…..!!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பிற்கான இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கௌதம் மேலான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் நிலையில் இளையராஜா இசையமைக்க உள்ளார். இதில் கதையின் நாயகனாக சூரியன் அடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் காவல்துறை அதிகாரியாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்கின்றார்.
இந்நிலையில் தற்போது சென்னையில் சூட்டிங் நடந்த போது ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னை கேளம்பாக்கத்தில் சூட்டிங் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்ட நிலையில் ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.