இது என்ன தமிழ் படமா…? இல்ல ஹாலிவுட் படமா…? நடிகர் சிவகார்த்திகேயனின் மிரள வைத்த அயலான் பட டீசர் வீடியோ…! - cinefeeds
Connect with us

TRENDING

இது என்ன தமிழ் படமா…? இல்ல ஹாலிவுட் படமா…? நடிகர் சிவகார்த்திகேயனின் மிரள வைத்த அயலான் பட டீசர் வீடியோ…!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்துவருகிறது.இந்த நிலையில் படம் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் டீசர் லான்ச் நடைபெற்றது. டீசரின் தொடக்கத்தில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து காட்சி இடம்பெறுகிறது.

Advertisement

[irp]

அடுத்து பறக்கும் தட்டு, ஏலியன் என ஜானர் மாறும் டீசரின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிசிறில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை டீசரின் காட்சிகள் உணர்த்துகின்றன. ஒரு கட்டத்தில் ஏலியனுடன் இணைந்து வாழும் வகையிலான கதை ஹ்ரீத்திக் ரோஷனின் ‘கோய் மில் கயா’ படத்தை நினைவூட்டுகிறது. ஏலியன் வடிவமைப்பும் கவனம் பெறுகிறது. ரஹ்மானின் பின்னணி இசை டீசரை முழுமைப்படுத்துகிறது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் இது தமிழ் படமா? இல்ல ஹாலிவுட் படமா? என ஷாக்கில் உள்ளனர். இதோ அயலான் பட டீசர் வீடியோ…!

Advertisement

[irp]

Advertisement
Continue Reading
Advertisement