படுவிமர்சையாக நடந்த தளபதின் 68வது பட பூஜை… mass-ஆக entry கொடுத்த விஜய்… செம குஷியில் விஜய் ரசிகர்கள்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

படுவிமர்சையாக நடந்த தளபதின் 68வது பட பூஜை… mass-ஆக entry கொடுத்த விஜய்… செம குஷியில் விஜய் ரசிகர்கள்…!

Published

on

தமிழில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும்  விஜய் லோகேஷ் அவர்களின் இயக்கத்தில்  லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த அக்டோபர் 19 ம் தேதி வெளிவந்த முதல் நாளிலே 140 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக  விஜய்யின் அடுத்த படத்திற்காக பூஜை போடப்பட்டுள்ளது.

#image_title

 

 

Advertisement

இப்படமானது வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்பாத்தி S அகரத்தின் AGS ENTERTAINMENT நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் மற்றும் யுவனின் இரண்டாவது படமாகும். விஜய்யின் 68வது படமாகும்.

மேலும் இப்படத்தில் பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு மற்றும் வி. டி,வி. கணேஷ் நடிக்கவுள்ளனர். ஆகவே இப்பட பூஜையில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி. டி,வி. கணேஷ் மற்றும்  நடிகைகளான சினேகா, லைலா,மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் பூஜை வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

Advertisement