“தைரியம் இருந்தா நடவடிக்கை எடுங்க பாப்போம்” உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்… முதலமைச்சருக்கு உதயநிதி விடுத்த அதிரடி ‘Open Challenge’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தைரியம் இருந்தா நடவடிக்கை எடுங்க பாப்போம்” உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்… முதலமைச்சருக்கு உதயநிதி விடுத்த அதிரடி ‘Open Challenge’..!!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக ‘ஓபன் சேலஞ்ச்’ விடுத்துப் பேசியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆவேசமாக உரையாற்றிய அவர், “முதலமைச்சருக்கு நான் நேரடியாக ஒரு சவால் விடுகிறேன்; அவர் கைகளில் வைத்திருக்கும் கோப்புகளில் ஏதேனும் தவறு இருந்தால், தாராளமாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆளுங்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், “இத்தகைய உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி பின்வாங்கும் சாதாரண இயக்கம் திமுக கிடையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், “சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக்குகளைப் போல சிலர் இங்கே சட்டப்பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடம், திரைப்பட மேடை அல்ல” என்று சாடினார்.

Advertisement

உதயநிதி ஸ்டாலினின் இந்த காரசாரமான பேச்சைத் தொடர்ந்து அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, “சினிமா பஞ்ச் டைலாக்” என்ற வார்த்தை அவைக்குறிப்பில் இடம்பெற தகுதியற்றது எனக் குறிப்பிட்ட சபாநாயகர், அந்த குறிப்பிட்ட வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டார். இந்த ஓபன் சேலஞ்ச் மற்றும் சபாநாயகரின் அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in