CINEMA
ரசிகர்களே…! “இன்னைக்கு கண்டிப்பா வந்திடும்” The GOAT பட அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு…!!

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ட்ரைலர் குறித்த அப்டேட் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால் 6 மணிக்கு டிரைலர் அப்டேட் வெளியாகவில்லை. இதனை அடுத்து படத்தின் புதிய போஸ்டரை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் The GOAT படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை இன்று வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி அளித்துள்ளார்.