VIDEOS
“படப்பிடிப்பில் விக்ரம் செய்த செயல்”…. வேண்டாம் என கதறிய பட குழுவினர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்தத் திரைப்படம் முழுக்க கேஜிஎப் பட வானில் தங்கமிடக்கும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டும் அவர்களின் வாழ்க்கை குறித்தும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் மிக நீண்ட தாடி மற்றும் நீளமான முடி வைத்துக்கொண்டு இதுவரை இல்லாத தோற்றத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
தற்போது படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு குறித்தும் படப்பிடிப்பு முடிந்து தண்ணீரில் படக்குழுவினரோடு நீராடும் வீடியோ ஒன்றை விக்ரம் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம். pic.twitter.com/6NCiU6ezGQ
— Vikram (@chiyaan) December 5, 2022
