CINEMA
பாலாவுக்கு ஏன் இந்த கொடூரமான புத்தி..!!
‘சேது’ படத்தைப் பார்த்த பின்னர் தனது குருநாதர் பாலு மகேந்திரா தன்னை மோசமாக திட்டியதாக இயக்குநர் பாலா கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ‘சேது’ படம் பார்த்தபின் பாலு மகேந்திரா, நல்லவேளை இந்த படத்தை பார்க்காமலே இறந்துவிடுவேனோ என நினைத்தேன், என கூறி சென்றார்.அப்போது எல்லோரும் அந்த இடத்தில இருந்ததால் அவ்வாறு கூறினார். பின்னர் என்னை தனியாக அழைத்து பேசினார். அப்போது, உனக்கு ஏன் இந்த அளவுக்கு கொடூரமான புத்தி இருக்கிறது என திட்டினார்.
ஒரு அமைதியான பிராமின் பொண்ணு, அந்த பொண்ண அதே பாலேஜ்ல படிக்கிற ஒரு ரவுடிப்பையன் மிரட்டி லவ் பண்ண வைக்கிற. அவனால் அவன் கூட சேர முடியல. அவனால அவளோட மொறைப்பையனும் பிரிஞ்சு போறான். எப்படி உன்னால இந்த மாதிரி குரூர புத்தியோட யோசிக்க முடியுதுன்னு, நீ ஏன் இப்படி இருக்கன்னு கோபமா பேசிட்டாரு. எனக்கு என்ன சொல்லன்னு தெரியல, உங்கள மாதிரி நான் மென்மையானவன் இல்ல. எனக்கு இப்படித்தான் யோசிக்க தோணுது. உங்கள மாதிரி எடுக்குறதுக்குத் தான் நீங்க இருக்கீங்களே.. அப்புறம் நானும் எதுக்கு உங்கள மாதிரியே எடுக்கணும்ன்னு கேட்டுட்டு வந்துட்டேன்.