CINEMA
என் தங்கை கல்யாணத்துக்கே இப்படி பண்ணிட்டான்…என்கிட்டயே பிளாக்மெயில் வேலையா?…பல பேரோட ரகசிய வீடியோ வச்சிருக்கான்…”நாஞ்சில் விஜயனின் முகத்திரையைக் கிழித்த பெண் …சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வெடித்த சூர்யா தேவி…!
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பிரபல யூடியூபர் சூர்யா தேவி, விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் திருநங்கை வைஷூ விவகாரத்தில் நாஞ்சில் விஜயனின் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது சூர்யா தேவியின் இந்த திடீர் என்ட்ரி இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யா தேவி, கடந்த 2019-ஆம் ஆண்டு நாஞ்சில் விஜயனின் தங்கை திருமணத்திற்காகத் தான் கொடுத்த 2 லட்ச ரூபாய் கடனைத் திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி வருவதாக ஆவேசமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா தேவி, “கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கும் அவருக்கும் பெரிய பிரச்சனை நடந்தபோது பணம் தேவைப்படாததால் நான் கேட்கவில்லை. ஆனால், தற்போது நான் கடுமையான பண நெருக்கடியில் இருப்பதால், கடந்த 6 மாதங்களாக என் பணத்தைத் திரும்பக் கேட்டு வருகிறேன். அவர் தாரேன் என்று இழுத்தடிக்கிறாரே தவிர ஒரு பைசா கூட தரவில்லை. இதற்கிடையே மதுரையில் அவர் நடத்திய எக்ஸ்போவிற்கு என்னை வரவழைத்து, துணிகளை வாங்கிக்கொள்ளச் சொன்னார். நான் கிளம்பியதும் எனக்குப் பின்னாடியே ஆட்களை அனுப்பி, நான் பணம் கொடுக்காமல் துணிகளைத் திருடி ஓடிவந்தது போல நாடகமாடி, அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தற்போது என்னைப் பிளாக்மெயில் செய்கிறார்” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
மேலும் நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான புகார்களை அடுக்கிய சூர்யா தேவி, “நாஞ்சிலுக்கு எப்போதுமே பலருடைய தனிப்பட்ட மற்றும் ரகசிய வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதுதான் வேலை. ஆதாரங்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர் எப்போதுமே சாதாரண போன் காலில் பேச மாட்டார், வாட்ஸ்அப் காலில் மட்டும்தான் பேசுவார். சமீபத்தில் வைஷூ பிரச்சனை வெடித்தபோது கூட, அவரை ஆஃப் செய்ய ஆள் கேட்டு எனக்கு போன் செய்தார். நான் இப்போது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதால், நான் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் சட்ட ரீதியாக மீட்டுத் தந்தால் போதும்” என்று கண்ணீரும் ஆத்திரமுமாகத் தெரிவித்துள்ளார்.
