“எங்களுக்கு இந்தியா இருக்கு” அமெரிக்காவுக்கு நோ சொன்ன இஸ்ரேல் பிரதமர்.. உலகரங்கில் அதிரடி திருப்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களுக்கு இந்தியா இருக்கு” அமெரிக்காவுக்கு நோ சொன்ன இஸ்ரேல் பிரதமர்.. உலகரங்கில் அதிரடி திருப்பம்..!!

Published

on

இஸ்ரேலின் சக்திவாய்ந்த, வலிமைமிக்க கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனமாரப் பாராட்டியுள்ளார். உலக அரங்கில் இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளி அமெரிக்கா மட்டும்தான் என்று அந்நாட்டுத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேசியிருந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேதன்யாகு இந்த அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார். அமெரிக்காவுடன் தங்களுக்கு நல்ல உறவு இருந்தாலும், அதைத் தாண்டி இந்தியா போன்ற பிற முக்கிய நாடுகளின் பேராதரவும் இஸ்ரேலுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய நேதன்யாகு, அமெரிக்க அதிபர்களிலேயே டிரம்ப் தங்களின் மிகச் சிறந்த நண்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறினார். அதே நேரத்தில், 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிலிருந்து தங்களுக்குப் பேராதரவு கிடைத்து வருவதாகவும், குறிப்பாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்திய மக்களிடமிருந்து ஆதரவுகள் குவிந்து வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பல நாட்டுத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் விவரித்துள்ளார்.

Advertisement

மறுபுறம், காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் தாக்குதல்களால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,000-ஐக் கடந்துள்ளதாகவும், இதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் ஐநா தரவுகள் கூறுகின்றன. காசாவுக்குள் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதைத் தடுத்து, அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை இஸ்ரேல் ஏற்படுத்தி வருவதாக ஐநா விசாரணை ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. இத்தகைய கடுமையான சர்வதேச விமர்சனங்களுக்கு மத்தியிலும், இந்தியா தங்களின் சக்திவாய்ந்த கூட்டாளி என்று இஸ்ரேல் பிரதமர் பேசியிருப்பது உலகரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in