யாரும் தேவையில்லாத வேலை செய்யாதீங்க… MLA, அமைச்சர்களுக்கு தடை… முதலைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரும் தேவையில்லாத வேலை செய்யாதீங்க… MLA, அமைச்சர்களுக்கு தடை… முதலைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!!

Published

on

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று தேவையில்லாத ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என தமிழக முதலமைச்சர் விஜய் தனது கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் அரசுப் பள்ளி ஒன்றில் தவெக அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வு மற்றும் அங்கு மாணவியுடன் அவர் நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, முதல்வர் விஜய் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

Advertisement

அமைச்சரின் இந்தச் செயலால் அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் தொடர்ந்து, தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு கடிவாளம் போடும் வேலையை முதல்வர் விஜய் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அவர் கட்சி நிர்வாகிகளுக்குக் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in