BREAKING: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு…!!

Published

on

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி மாயமான 5 நபர்களில், ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நவீன கருவிகள் கொண்டு மண்ணுக்குள் புதையுண்டவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலச்சரிவு குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்கும், விபத்துக்கான காரணங்களை கண்டறிவதற்கும் மாநில அரசு உடனடியாக ஒரு பிரத்யேக விசாரணை குழுவை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த சோகமான சம்பவம் வயநாடு பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in