CRIME
“வெறும் 5 மாத இன்ஸ்டா பழக்கம்.. 15 வயது சிறுமியை கடத்தி வாலிபர் செய்த கொடூர செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அச்சிறுமி திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகனும், அச்சக உரிமையாளருமான வைகுண்டம் (20) என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த ஐந்து மாதங்களாக அச்சிறுமியுடன் பழகி வந்ததும், அது நாளடைவில் காதலாக மாறியதும் தெரியவந்தது. சிறுமியைச் சந்திப்பதற்காக ஈரோடு வந்த வைகுண்டம், “இங்கிருந்தால் நம்மைப் பிரித்துவிடுவார்கள்” எனக் கூறி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, சிறுமியைத் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்குக் கடத்திச் சென்றுள்ளார்.
திருநெல்வேலிக்குக் கடத்திச் செல்லப்பட்ட அந்தச் சிறுமியை வைகுண்டம் கட்டாயத் திருமணம் செய்து, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், சிறுமி திருநெல்வேலியில் இருப்பதை ரகசியத் தகவல்கள் மூலம் உறுதி செய்த அந்தியூர் போலீசார், அங்கு விரைந்து சென்று சிறுமியைப் பத்திரமாக மீட்டு அவது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மைனர் சிறுமியைக் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வாலிபர் வைகுண்டம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் அதிரடியாகச் சிறையில் அடைத்தனர்.
