CRIME
“இவன் டார்சர் தாங்க முடியலங்க!” அதனால் போட்டுத்தள்ளிட்டேன்… கணவனை குத்திக்கொலை செய்த 26 வயசு பெண்ணின் பகீர் வாக்குமூலம்… விருதுநகரை உலுக்கிய பயங்கர கொலை மேட்டர்…!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மனைவியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற கூலித்தொழிலாளிக்கும், திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், கணவர் மணி தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தொடர்ந்து குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு, மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணி தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த மோதலின் போது ஏற்பட்ட கடும் ஆத்திரத்தில், திவ்யபாரதி வீட்டில் இருந்த கத்தியால் மணியைத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த மணி, சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் காவல்துறையினர், மணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது கணவரின் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் காரணமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டதாக திவ்யபாரதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் திவ்யபாரதி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
