“காதல் வலையில் விழுந்த சென்னை பெண் ஐடி ஊழியர்… உல்லாசமாக இருந்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

“காதல் வலையில் விழுந்த சென்னை பெண் ஐடி ஊழியர்… உல்லாசமாக இருந்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது..!!

Published

on

சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த 25 வயது மென்பொருள் பெண் ஊழியர் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன் (25) என்பவருடன் பழகி, காதலித்து வந்துள்ளார். இக்காலக்கட்டத்தில் தமிழரசன் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அந்த இளம்பெண் திருமணப் பேச்சை எடுத்தபோது, தமிழரசன் அவரைத் திருமணம் செய்யக் கடுமையாக மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி, இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அந்தப் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மென்பொருள் ஊழியர், கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த தமிழரசனைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in