“அம்மா வலிக்குது மா”.. உல்லாசமா இருக்க தடையாக இருந்த குழந்தைகள்.. பெற்றோர் செய்த கொடூர டார்ச்சர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா வலிக்குது மா”.. உல்லாசமா இருக்க தடையாக இருந்த குழந்தைகள்.. பெற்றோர் செய்த கொடூர டார்ச்சர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்து ஆகிய இருவரும், தங்களது வீட்டில் வளர்ந்து வந்த 5 வயது தனுஷ் மற்றும் 2 வயது ரேவந்த் ஆகிய இரு குழந்தைகளையும் தொடர்ந்து மிகக் கொடூரமான முறையில் துன்புறுத்தி வந்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டில் சோதனை செய்தபோது இரு குழந்தைகளின் உடலிலும் தீக்காயங்கள், நகக்கீறல்கள் மற்றும் தாக்கப்பட்டதற்கான தழும்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், 2 வயது குழந்தையின் இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் இரு குழந்தைகளையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நகிரிகாந்தி ரவி தனது முதல் மனைவியைப் பிரிந்தவர் என்பதும், இந்து தனது முதல் கணவரை விவாகரத்து செய்தவர் என்பதும் தெரியவந்தது. இதில் மூத்த குழந்தை இந்துவின் முதல் கணவருக்குப் பிறந்தவர் ஆவார். தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு இந்த இரு குழந்தைகளும் இடையூறாக இருப்பதாகக் கருதி, கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடம்பில் சூடு வைப்பது, சிகரெட்டால் சுடுவது, கடுமையாகத் தாக்குவது எனத் தம்பதியினர் கொடூரமாகத் துன்புறுத்தி வந்துள்ளனர். இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதாமற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரவி மற்றும் இந்து ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிகிச்சை முடிந்து குணமடைந்த இரு குழந்தைகளும் தற்போது அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in