LATEST NEWS
திருச்செந்தூரில் திடீர் அதிர்ச்சி.. 80 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்.. பவளப்பாறைகள் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் பீதி..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், நாழிக்கிணறு முதல் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியது, பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரிய நிகழ்வால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிந்தன, இதைப் பார்க்க திரண்ட பக்தர்கள் பாறைகள் மீது ஏறி செல்ஃபி எடுத்ததால் பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை எச்சரித்து அகற்றியுள்ளனர்.
கடல்சார் வல்லுநர்களின் கூற்றுப்படி, பௌர்ணமி/அமாவாசை காலங்களில் ஏற்படும் ஈர்ப்பு விசை மாற்றங்கள் மற்றும் தொடர்ந்து நிலவும் கடல் அரிப்பு காரணமாக இந்த இயற்கை நிகழ்வு நடக்கிறது. இது தற்காலிகமானதே, சில மணி நேரங்களில் கடல் நீர் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால் பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
