LATEST NEWS
“உன்ன கொன்னா தான் என் பொண்டாட்டி வருவா” மாமியார் பேச்சை கேட்டு பெத்த தாய்க்கே விஷம் வைத்த கொடூர மகன்.. கொடூரத்தின் உச்சம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த பர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவரின் மனைவி, குடும்பச் சண்டை காரணமாகத் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர ரவீந்திரா முயன்றபோது, அவரது மாமியார் பூல்வதி ஒரு அதிர்ச்சிகரமான நிபந்தனையை விதித்துள்ளார். பெற்ற தாயைக் கொன்றுவிட்டால் மட்டுமே தனது மகளை அவருடன் அனுப்பி வைப்பதாகக் கூறி, அவரே கொலை செய்வதற்கான விஷத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளார்.
மனைவி மீதான மோகத்தால் மாமியாரின் பேச்சைக் கேட்ட ரவீந்திரா, வீட்டிற்கு வந்து தனது தாய் ராம்மூர்த்தி சாப்பிட வைத்திருந்த கொண்டைக்கடலை உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே தாயின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெற்ற தாயை விஷம் வைத்துக் கொல்ல முயன்ற மகன் ரவீந்திராவைக் கைது செய்துள்ளனர்; மேலும், தலைமறைவாக இருக்கும் மாமியார் பூல்வதியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
