LATEST NEWS
“சாரி வேண்டாம் சார்…” அன்று விஜய் சொன்ன அதே டயலாக்கை வைத்து இன்று திமுக செய்த தரமான செய்கை… பரபரக்கும் அரசியல் களம்..!!
நாகர்கோவில் காவல் மரணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக அஜித்குமார் காவல் மரணத்தின்போது, அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டதையும், அதற்கு விஜய் “சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் இன்று, தவெக ஆட்சியில் மக்கள் “ரீல்ஸ் வேண்டாம், எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கேட்பதாகப் பரந்தாமன் விமர்சித்தார். மேலும், நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தைரியமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெகவினருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என இரட்டை நிலையை அரசு கடைப்பிடிக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். வெறும் 200 கிராம் குட்கா வைத்திருந்தவரை தவெக அரசு அடித்துக் கொலை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், அதே நேரத்தில் 400 கிலோ குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட விஜயபாஸ்கரைத் தங்களது கட்சியில் சேர்த்துள்ளதாகச் சாடினார். தவெக ஆட்சியமைத்த வெறும் 60 நாட்களில் இதுவரை 4 காவல்துறை மரணங்கள்நிகழ்ந்துள்ளதாகக் கூறி, தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பரந்தாமன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
