CINEMA
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யனும்… மாணவர்களோடு நான் நிற்கிறேன்.. ஜோதிகா வெளியிட்ட பரபரப்பு பதிவு..!!
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகை ஜோதிகா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் எப்போதும் மாணவர்களுடனும், இந்த நாட்டின் எதிர்காலமாகவும் விளங்கும் இளைஞர்களுடனும் உறுதியாக துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அபிஜித் மற்றும் சவ்ரவ் போன்ற தலைசிறந்த பிள்ளைகளையே நாட்டின் தாய்மார்கள் வளர்க்க விரும்புவதாகவும், இன்றைய ‘Gen-Z’ தலைமுறையினரின் விழிப்புணர்வையும் துணிச்சலையும் நினைக்கும் போது தனக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
