உஷார்..! “என்னை கர்ப்பமாக்கினால் ரூ.8 லட்சம் தருகிறேன்” முகநூலில் பரவும் பகீர் மோசடி… பேராசையால் கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உஷார்..! “என்னை கர்ப்பமாக்கினால் ரூ.8 லட்சம் தருகிறேன்” முகநூலில் பரவும் பகீர் மோசடி… பேராசையால் கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!!

Published

on

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் “என்னை கர்ப்பமாக்கினால் ₹8 லட்சம் தருகிறேன்”, “எனது விதவை மகளுக்குக் குழந்தை பெற்றுத் தந்தால் பணம்”, “என் மகளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்ற கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் கூடிய வீடியோக்கள் அதிகளவில் உலா வருகின்றன. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் முதியவர்களின் ‘ஃபீட்’களில் இவை அதிகளவில் காண்பிக்கப்படுகின்றன. ஆர்வம் மற்றும் பேராசை காரணமாக இவற்றை க்ளிக் செய்யும் போது, அல்காரிதம் மூலம் அவர்கள் கணக்குகள் கண்டறியப்பட்டு மேலும் இதுபோன்ற போலி விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.

இத்தகைய பதிவுகளின் கமெண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் தொலைபேசி எண்களைப் பதிவிட்டு ஏமாறத் தயாராகின்றனர். இதற்கு உதாரணமாக, பீகாரைச் சேர்ந்த ஒரு நபர் 8 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு தனது எண்ணைப் பதிவிட்டுள்ளார். அவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், சட்டப்பூர்வப் பத்திரங்கள் தயார் செய்ய வேண்டும் என்றும், இதில் எந்த சிக்கலும் வராது என்றும் கூறி முன்பணமாக ரூ.800 கேட்டுள்ளனர். அந்த நபர் தனது இரண்டு நாள் கூலிப் பணத்தை அனுப்பிய நிலையில், அடுத்து வந்த நாட்களில் மேலும் பல வழிகளில் அவரிடமிருந்து தொடர்ச்சியாகப் பணத்தைப் பறித்து அவரைப் பெருவலையில் வீழ்த்தியுள்ளனர்.

Advertisement

https://twitter.com/askrajeshsahu/status/2081783130537763303/video/1

இது முற்றிலும் சைபர் குற்றவாளிகளால் பின்னப்பட்ட ஒரு மோசடி வலையாகும். இது போன்ற பேராசைகளிலும், பொய்யான விளம்பரங்களிலும் சிக்கினால் பணத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் முகம் காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். எனவே, உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இத்தகைய போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரியுங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in