“வேலையை விட்டு தூக்கினா சும்மா விட்டுருவேனா..?” நிறுவனத்தை அலறவிட்ட பெண் ஆடிட்டர்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தீர்ப்பு… ஷாக்கில் கம்பெனி முதலாளி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வேலையை விட்டு தூக்கினா சும்மா விட்டுருவேனா..?” நிறுவனத்தை அலறவிட்ட பெண் ஆடிட்டர்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தீர்ப்பு… ஷாக்கில் கம்பெனி முதலாளி..!!

Published

on

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி தன்னைத் தவறாகப் பணிநீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். ஆடிட்டராகப் பணிபுரிந்த அவர், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் தொடர்பாகப் பேசியதாலும், கொரிய மொழி தெரியவில்லை என்பதாலும் தான் பழிவாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டதாக வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் தீர்ப்பாயம், அந்தப் பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவருக்குச் சுமார் ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. முறையற்ற பணிநீக்கத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள் சட்டப்படி உரிமைகளைப் பெற முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in