LATEST NEWS
“ஐயோ இதுல எப்படி வண்டி ஓட்டுறது..?” ரோடு பாதியா பிளந்து கிடக்குது.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
பீகாரில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலத்தின் நடுவே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரவும் பகலும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் கடந்து செல்லும் இந்த முக்கியமான நெடுஞ்சாலையில், பாலத்தின் நடுவிலேயே இத்தகைய பிளவு காணப்படுவது அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடையே கடும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
पुल में दरार दिख रही है… लेकिन जिम्मेदार लोग कब जागेंगे?
बिहार के एक हाईवे पुल का वीडियो सामने आया है, जिसमें पुल के बीचों-बीच दरार दिखाई दे रही है। इसी हाईवे से दिन-रात हजारों छोटे-बड़े वाहन गुजरते हैं।
अगर समय रहते इसकी जांच और मरम्मत नहीं हुई, तो यह लापरवाही किसी बड़े… pic.twitter.com/0f6yOxLDJP— Dr.Tabassum Parveen (@Tabassum__2) July 31, 2026
காலப்போக்கில் இந்தப் பிளவு மேலும் பெரிதாகி ஒரு மாபெரும் விபத்திற்கு வழிவகுக்கும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும். பொதுமக்களின் உயிரையும் பாதுகாப்பையும் முதன்மையாகக் கொண்டு, இந்த இடத்தைப் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து, பாலத்தை விரைவாகச் சீரமைக்கத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
