“இவரு மனுஷனே இல்லை… சாமி..!” அடித்துச் செல்லப்பட்ட சிவ பக்தர்… உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரியல் ஹீரோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இவரு மனுஷனே இல்லை… சாமி..!” அடித்துச் செல்லப்பட்ட சிவ பக்தர்… உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரியல் ஹீரோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் காவடி யாத்திரையின் போது, கங்கை நதியின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த சிவ பக்தரை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர் நிதேஷ் கேத்வால் தன் உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்பாக மீட்டுள்ளார். காங்ரா படித்துறையில் புனித நீராடிய போது எதிர்பாராதவிதமாகச் சுழலில் சிக்கிய அந்த இளைஞரைக் கண்டதும், சற்றும் தயங்காமல் ஆற்றில் குதித்த காவலர் நிதேஷ், கடும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டுக்கரை சேர்த்தார்.

नोएडा (उ.प्र) निवासी शिवभक्त हरिद्वार स्थित कांगड़ा घाट पर नहाने के दौरान गंगा के तेज बहाव में बहने लगा। इसी दौरान वहां मौजूद #UttarakhandPolice SDRF जवान ने तत्काल गंगा में कूदकर कड़ी मशक्कत के बाद युवक को सकुशल बचा लिया।#KanwarYatra2026#kanwaryatra pic.twitter.com/MDDb9lRd2Z— Uttarakhand Police (@uttarakhandcops) July 30, 2026

காவல்துறையின் இந்தச் சமயோசித புத்தியாலும் துணிச்சலான மீட்புப் பணியினாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது. உத்தரகாண்ட் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த மீட்புப் பணி தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான சூழலில் தேவதையாக வந்து உயிரைக் காத்த அந்த SDRF வீரரின் வீரத்தையும் சுறுசுறுப்பையும் சமூக ஊடகப் பயனர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in