“பாவம் கேட்டை சாத்திட்டாங்க, விஜய் இப்போ தனிமைப்பட்டு நிக்குறாரு” காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாவம் கேட்டை சாத்திட்டாங்க, விஜய் இப்போ தனிமைப்பட்டு நிக்குறாரு” காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின்..!!

Published

on

காவிரி நதிநீர் விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்த முதலமைச்சர் சி. விஜய், எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் தற்போது தனிமைப்பட்டு நிற்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடக அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது எவ்விதப் பயனையும் அளிக்காது என முன்பே எச்சரித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்டவுடன், “இப்போதைக்கு நீங்கள் வர வேண்டாம்” என்று முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகா கேட்டை சாத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே விவகாரத்திற்காக கர்நாடகாவில் அரசியல் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரிக்காக, இங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? உங்களால் கூட்ட முடியுமா, முடியாதா? என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி நேரடி வினாவை எழுப்பியுள்ளார். மேலும், கடந்த கால அனுபவங்களின்படி சட்டம் சார்ந்த போராட்டமே காவிரி விவகாரத்தில் சரியான தீர்வாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in