LATEST NEWS
தானே தைத்த பெண் ஆடையை அணிந்து கொடூர முடிவு எடுத்த நபர்..! தற்கொலைக்கு முன் தையல்காரர் சொன்ன மர்ம வார்த்தைகள்… நடுங்க வைக்கும் ஜெய்ப்பூர் சம்பவம்..!!
ஜெய்ப்பூரின் கல்டா கேட் பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து, முகத்தில் மேக்கப் போட்டிருந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். தற்கொலைக்கான காரணம் குறித்து எஃப்.எஸ்.எல் தடயவியல் குழுவினர் உதவியுடன் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர் தையல் கலைஞரான முன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் திருமணமானவர் மற்றும் 3 குழந்தைகளுக்குத் தந்தையாவார். தற்கொலை செய்து கொள்ளும்போது அவர் அணிந்திருந்த பெண் ஆடையை அவரே சொந்தமாகத் தைத்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலை கடிதமும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் அவரது குடும்ப வாழ்க்கை, நிதி நிலைமை, மனநிலை மற்றும் செல்போன் தொடர்புகள் குறித்து காவல்துறையினர் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறை வட்டாரங்களின்படி, முன்னா கடந்த சில மாதங்களாகத் திருநங்கைகளுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவரது நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக சிவப்பு ஆடை அணிந்த ஒரு பெண் தனக்குத் தெரிவதாக அவர் கூறி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கல்டா கேட் காவல் நிலைய ஆய்வாளர் தரம் சிங் கூறுகையில், பிரேதப் பரிசோதனை மற்றும் எஃப்.எஸ்.எல் அறிக்கைகளுக்குப் பிறகே முழுமையான காரணங்கள் தெரியவரும் என்றும், காவல்துறையினர் அனைத்து சாத்தியக்கூறுகளையும் வைத்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
