வான்வழித் தாக்குதல் மட்டும் போதாது… ஈரானில் இருந்து வெளியேற டிரம்புக்கு தலைமைத் தளபதி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வான்வழித் தாக்குதல் மட்டும் போதாது… ஈரானில் இருந்து வெளியேற டிரம்புக்கு தலைமைத் தளபதி எச்சரிக்கை..!!

Published

on

ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை வாஷிங்டன் கண்டறிய வேண்டும் என அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் டான் கெய்ன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சிஎன்என் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்களின் படி, மோதலை தீவிரப்படுத்தும் வகையில் தற்போது பரிசீலிக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும், வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே அதிபர் டிரம்பின் இலக்குகளை அடைய உதவாது என்றும் ஜெனரல் டான் கெய்ன் நம்புகிறார்.

ராணுவத்தின் மீதான இழப்புகளையும், கையிருப்பில் ஆயுதங்கள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்டு, ராணுவத்தைப் பாதுகாப்பதற்காகவே கெய்ன் மாற்று வழிகளைத் தேடி வருகிறார் என கூறப்படுகிறது. ஈரானுக்குள் தரைப்படை வீரர்களை அனுப்ப தொடர்ந்து தயக்கம் காட்டி வரும் அதிபர் டிரம்ப், வான்வழி தாக்குதல் மூலமே ஈரானைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க முடியும் என நம்புகிறார். ஆனால், அந்த முடிவு வெற்றியடைவது கடினம் என கெய்ன் கருதுகிறார்.

Advertisement

ஈரானுடனான போர் ஒரு முக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளதாகக் கருதும் கெய்ன், இது குறித்துப் பிற முக்கியஸ்தர்களான சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிப், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோருடன் பேசி வருவதாக சிஎன்என் தகவல் தெரிவிக்கிறது. மோதலைத் தீவிரப்படுத்துவதால் ஏற்படும் பாதகங்களை எச்சரித்த போதிலும், அதிபர் டிரம்புடனான தனது உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் கெய்ன் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற வெள்ளை மாளிகை கூட்டத்தில், குறைந்து வரும் அமெரிக்க வெடிமருந்து இருப்புகள் குறித்து எச்சரித்த அதே வேளையில், “நீங்கள் இந்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால், ஈரானை நம்மால் முற்றிலும் நிர்மூலமாக்க முடியும்” என்றும் அவர் டிரம்பிடம் உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in