LATEST NEWS
“என்னை அவிழ்க்காதீங்க… அப்பா என்னைக் கொன்னுடுவாரு..!” இருண்ட காட்டில் சிறுவனின் அலறல்.. வீடியோவை பார்த்து கதறி அழுத நெட்டிசன்கள்…!!
லெபனானில் பஃகா காட்டுப் பகுதியில் நள்ளிரவில் உலாவிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்று, இருட்டில் தனியாக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. அச்சமடைந்த அந்த இளைஞர்கள் உடனடியாக அச்சிறுவனின் அருகில் சென்று, அவனைக் கட்டிலிருந்து அவிழ்த்து அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், அவர்களைத் தடுத்து அச்சிறுவன் கூறிய வார்த்தைகள் அரபு உலகையே உலுக்கியுள்ளதுடன், அப்பதிவு சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.
المقطع الأكثر تداولا في لبنان:
في منتصف الليل، وبينما كان مجموعة من الشباب يتجولون في غابة بعقلين، لمحوا طفل مقيّد إلى شجرة، وحيدًا في الظلام.
اقتربوا منه بسرعة محاولين فك رباطه وإعادته إلى والديه، لكن المفاجأة كانت في ردّة فعل الطفل نفسه بكلمتين هزت ارجاء الوطن العربي وأصبح… pic.twitter.com/B95qgrZ7I7— ليزر (@exa0d) August 12, 2026
அவர்களைப் பார்த்து அச்சிறுவன் பயத்துடன் கூறிய, “என்னை அவிழ்த்துவிடாதீர்கள்… நான் அவிழ்ந்துவிட்டால் என் அப்பா என்னைக் கொன்றுவிடுவார்!” என்ற இரு வார்த்தைகள் அனைவரையும் உரைய வைத்தன. சொந்தத் தந்தையின் கொடுமைக்கு பயந்து இருண்ட காட்டில் மரத்தில் கட்டுண்டு கிடந்த அந்தச் சிறுவனின் நிலைமையைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர். “பெற்ற பிள்ளைகளிடம் இறைவனுக்குப் பயந்து அன்பு காட்டுங்கள்” என்ற உருக்கமான கோரிக்கையுடன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
