LATEST NEWS
ஆஹா இப்படியொரு பாஸ் ஆ.? “ஆடர் போனா என்ன… என் தொழிலாளர்கள் தான் முக்கியம்” 6 மணிக்கு மேல் NO வேலை.. ஞாயிற்றுக்கிழமை NO மெசேஜ்.. இணையத்தை கலக்கும் சம்பவம்..!!
18 நகரங்களில் வடிவமைப்பு நிறுவனத்தைச் நடத்தி வரும் சாரா ஷாம் என்ற பெண் தொழிலதிபர், தனது ஊழியர்களை தினமும் மாலை 6 மணிக்குக் கண்டிப்பாக வீட்டிற்கு அனுப்பிவிடும் விதியைப் பின்பற்றி வருகிறார். ஆரம்பத்தில் இரவும் பகலும் உழைப்பதுதான் சிறந்த முடிவுகளைத் தரும் என்று நினைத்த அவர், போதிய ஓய்வும் வார இறுதி விடுமுறையும் கிடைக்கும்போதே ஊழியர்களின் படைப்பாற்றல் சிறந்து விளங்குவதைக் கண்டறிந்தார். சோர்வுடன் செய்யப்படும் வேலைகள் எப்போதுமே சிறந்த பலனைத் தருவதில்லை என்பதை உணர்ந்து இந்த விதியை அமல்படுத்தினார்.
தனது நிறுவனத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வேலை நேரம் என்றும், வார இறுதிகளில் எந்தவொரு அலுவல் சார்ந்த அழைப்புகளோ கெடுவோ (Deadlines) கிடையாது என்றும் சாரா உறுதியாக அறிவித்தார். வார இறுதி நாட்களில் வேலை செய்ய வேண்டும் அல்லது சனி, ஞாயிறுகளில் போன் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்த சில வாடிக்கையாளர்கள் இதன்காரணமாக நிறுவனத்தை விட்டு விலகினர். இருப்பினும், தன் ஊழியர்களின் நலனுக்காக அந்த வாடிக்கையாளர்களை இழக்கத் துணிந்தாரே தவிர, தன் விதியை அவர் தளர்த்திக் கொள்ளவில்லை.
சாரா ஷாம் லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்த இந்த பதிவு இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வேலை நேரம் முடிந்த பிறகு ஓய்வு எடுப்பது மனித மனதிற்கும் உடல்நலத்திற்கும் மிக அவசியமானது என்றும், அதிக நேரம் வேலை செய்வதால் மட்டும் உற்பத்தித்திறன் அதிகரித்துவிடாது என்றும் பலரும் சாராவின் இந்த ஆரோக்கியமான வேலைச் கலாச்சாரத்திற்கு (Work-Life Balance) ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
