“அட கொடுமையே..!” வீடியோ காலில் பதிவு செய்யப்பட்ட அந்தரங்கக் காட்சி.. 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி அரங்கேறிய கொடூர அநீதி.. கன்னியாகுமரியை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அட கொடுமையே..!” வீடியோ காலில் பதிவு செய்யப்பட்ட அந்தரங்கக் காட்சி.. 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி அரங்கேறிய கொடூர அநீதி.. கன்னியாகுமரியை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சோ, அப்பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவியை ஒருதலைப்பட்சமாகக் காதலித்துத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நடனப் பயிற்சிக்குச் சென்று திரும்பிய மாணவியைத் தொடர்ந்து துரத்தி வற்புறுத்தியதுடன், பின்னாளில் காதலுக்குச் சம்மதிக்க வைத்து செல்போனில் வீடியோ காலில் பேசும்போது மாணவிக்குத் தெரியாமல் அவரது அந்தரங்கக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

அந்தத் தனிப்பட்டக் காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தொடர்ந்து தனிமையில் இருக்க வற்புறுத்தியதை மாணவி மறுக்கவே, மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நடந்த உண்மையை தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பெற்றோரின் புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆரோக்கிய டிக்சோ மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in