“ஒரு ரூபாய் கூடத் தர மாட்டேன்..!” தந்தை இறந்த இறுதிச் சடங்கு செலவில் வெடித்த மோதல்…. தம்பி செய்த வெறிச்செயல்… ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒரு ரூபாய் கூடத் தர மாட்டேன்..!” தந்தை இறந்த இறுதிச் சடங்கு செலவில் வெடித்த மோதல்…. தம்பி செய்த வெறிச்செயல்… ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஹைதராபாத் சூர்நகர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட குவாரி பஸ்தியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முடாவத் வெங்கடேஷ் (28) என்பவரது தந்தை இறந்தபோது, இறுதிச் சடங்கு செலவுகள் அனைத்தையும் அவரே தனி ஆளாக ஏற்றுச் செய்துள்ளார். ஆனால், அவரது தம்பியான சிவா (26) தனக்குச் சொத்து பங்கு கிடைக்கவில்லை எனக் கூறி இறுதிச் சடங்கிற்காக ஒரு ரூபாய் கூடச் செலவளிக்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்தபோது, ஆத்திரமடைந்த சிவா தன் அண்ணன் வெங்கடேஷைக் கத்தியால் குவறிக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய வெங்கடேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள தம்பி சிவாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in