LATEST NEWS
“என் வாழ்நாளில் நான் செய்த ஒரே தவறு..!” உயிர் துறப்பதற்கு முன் முன்னாள் சபாநாயகர் எழுதிய அந்த வார்த்தைகள்… உலுக்கி எடுக்கும் மரணக் கடிதம்!
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளார். ராம்பூர்ஹாட்டில் 5 முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியுள்ள இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரது அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், கட்சியின் தவறுகளைத் தன்னால் தொடர்ந்து சுமக்க முடியாது என்றும், தன் வாழ்வில் எந்தப் பணிக்காகவும் தான் லஞ்சம் வாங்கியதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசியலில் நுழைந்ததே தன் வாழ்நாளில் செய்த தவறு என்று உணர்வதாகவும், தன் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும் அந்தத் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
