“அடச்சீ.. பிணத்தில் கூட ஆசையா..?” துப்புரவு பணியாளர் செய்த அதிர்ச்சி காரியம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி.. பீகாரில் அரங்கேறிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடச்சீ.. பிணத்தில் கூட ஆசையா..?” துப்புரவு பணியாளர் செய்த அதிர்ச்சி காரியம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி.. பீகாரில் அரங்கேறிய சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் சவான் மாவட்டத்திலுள்ள சதார் மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் பலியான அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலிலிருந்த தாலி, தோடுகள் மற்றும் கொலுசு போன்ற தங்க, வெள்ளி நகைகள் மர்மமான முறையில் காணாமல் போனது தெரியவந்தது.

अस्पताल में मरी हुई महिला की लाश से मंगलसूत्र, बाली, पायल चोरी कर ली गई है। एक्सीडेंट में इस महिला की मौत हुई थी। मामला सदर अस्पताल का है। महिला सफ़ाई कर्मचारी ने चोरी की थी।
📍सिवान (बिहार) pic.twitter.com/btERidLQiI— Madan Mohan Soni (@madanmohansoni) August 16, 2026

இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் பெண் ஒருவர் தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது சிசிடிவி கேமராவில் பதிவாகி அம்பலமானது. இறந்தவரின் உடலுக்குக் கூட மரியாதை தராமல், சுயநலத்திற்காக இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்ட அந்தப் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in