LATEST NEWS
அய்யோ கடவுளே..! கணவனின் உயிரைக் காப்பாற்ற செய்த விபரீதம்.. 91 வயதில் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் நின்ற மூதாட்டி.. நீதிபதியின் நெகிழ்ச்சித் தீர்ப்பு.. நெஞ்சை பிசையும் வைரல் சம்பவம்..!!
91 வயதான ஹெலன் மற்றும் அவரது 88 வயதான கணவர் ஜார்ஜ் ஆகிய இரு முதியவர்களும் 65 ஆண்டு காலமாகத் தங்களின் திருமண வாழ்க்கையைத் தியாகத்தோடு வாழ்ந்து வந்துள்ளனர். ஜார்ஜ் கடுமையான இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு, உயிர் வாழ ஒரு நாளைக்கு 12 மாத்திரைகளை நம்பியிருந்தார். இந்நிலையில், அவர்களின் கூடுதல் மருத்துவக் காப்பீடு திடீரென காலாவதியானதால், வழக்கமாகச் செலுத்தும் $50 காப்பீட்டுத் தொகைக்கு மாறாக, மாதாந்திர மருந்துகளுக்கு $940 செலுத்த வேண்டிய கட்டாயம் ஹெலனுக்கு ஏற்பட்டது. கணவனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைவதைக் கண்டு பயந்துபோன ஹெலன், கையில் பணமில்லாததால் வேறு வழியின்றி மருந்தகத்தில் இருந்து அந்த மருந்துகளைப் பணம் செலுத்தாமல் எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.
🚨HEARTBREAKING: 91-year-old Helen and her 88-year-old husband George had been married for 65 years. George relied on 12 pills a day for severe heart failure.
When their supplemental insurance lapsed, Helen faced a $940 bill for his monthly prescriptions instead of the usual $50… pic.twitter.com/pXnb8TOIlN— Evelyn (@Evelyn001d) August 19, 2026
இதன் காரணமாக அவர் பெரும் திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, மருத்துவமனை உடையுடனும் விலங்குகளுடனும் நேரடியாக நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து அதிகாரிகள் நிறுத்தினர். இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு பெரும் மனவேதனையடைந்த நீதிபதி மார்கஸ், உடனடியாக ஹெலனின் கைகளில் இருந்த விலங்குகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த முதிய தம்பதியரின் வறுமை மற்றும் நிலையை உணர்ந்த நீதிபதி, அவர்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்ததுமட்டுமன்றி, அவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகள் மற்றும் இலவச மருந்துகளையும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்து மனிதநேயத்தை நிலைநாட்டினார்.
