LATEST NEWS
ரூ.5,000 கோடி மின்சார ஊழல்?.. மீண்டும் சீறும் லஞ்ச ஒழிப்புத்துறை… செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!
திமுக ஆட்சியில் மின் கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து மின் கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநிலத்தில் செயற்கையாக மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவது போன்ற சூழலை ஆவணங்களில் உருவாக்கி, தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விசாரணையில் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியானால், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
