LATEST NEWS
ச்ச இது என்னப்பா..? சங்கி அமைச்சர் சாரி… நீங்க பாத்ரூம் எதிர்க்கட்சித்தலைவர்… மாறி மாறி சட்டசபையில் குழந்தைங்க மாதிரி அடித்துக்கொண்ட உதயநிதி VS அமைச்சர் நிர்மல்குமார்..!!
தமிழக சட்டப்பேரவையின் மின்சாரத்துறை விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார மோதல் ஏற்பட்டுள்ளது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், செந்தில் பாலாஜியை ‘கரூர் கம்பெனி’ மற்றும் ‘கோவை MLA’ எனக் குறிப்பிட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த அமளியின் போது குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நிர்மல்குமாரை நோக்கி “சங்கி அமைச்சர்… சாரி…” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டார். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மல்குமார், “பாத்ரூமில் 3 மணி நேரம் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்” என யாரையாவது குறிப்பிட்டால் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இப்படியாகக் கரூர் கம்பெனி, சங்கி அமைச்சர் மற்றும் பாத்ரூம் விவகாரம் என இருதரப்பும் மாற்றி மாற்றித் தனிநபர் விமர்சனங்களை முன்வைத்ததால் சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவாத மோதல் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
